மீண்டும் படம் தயாரித்து, நடிக்கப்போகும் சமந்தா
ADDED : 141 days ago
தெலுங்கில் சுபம் என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக உருவெடுத்தார் சமந்தா. புதுமுகங்கள் நடிப்பில் உருவான இந்த படத்தில் ஒரு நகைச்சுவை கலந்த கெஸ்ட் ரோலிலும் நடித்தார் சமந்தா. இந்த நிலையில் மீண்டும் ஒரு படத்தை தயாரித்து நடிக்கப்போகிறார். அந்த படத்தை நந்தினி ரெட்டி இயக்குகிறார். இவர் ஏற்கனவே 2013ம் ஆண்டில் சித்தார்த், சமந்தா நடிப்பில் ஜபர்தஸ்த் மற்றும் 2019ம் ஆண்டில் சமந்தா கதையின் நாயகியாக நடித்த ஓ பேபி போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்த புதிய படத்தின் கதை பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.