மேலும் செய்திகள்
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
47 days ago
கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த்
47 days ago
மோகன்லால் நடிப்பில் வரும் ஆகஸ்ட் மாதம் 'ஹிருதயபூர்வம்' என்கிற படம் வெளியாக இருக்கிறது. பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடு டைரக்ஷனில் உருவாகியுள்ள இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலரில் மோகன்லாலும் இன்னொரு நடிகரும் பஹத் பாசில் குறித்து உரையாடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இது மோகன்லால் மற்றும் பஹத் பாஸில் ரசிகர்களிடையே மகிழ்ச்சியையும் வரவேற்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் மோகன்லாலின் இந்த பெருந்தன்மைக்காக தனது மனைவி நஸ்ரியா, சகோதரர் பர்ஹான் பாசில் ஆகியோருடன் மோகன்லாலின் வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் பஹத் பாசில். இந்த சந்திப்பின்போது மோகன்லாலின் மனைவியும் மகன் நடிகர் பிரணவும் உடன் இருந்தனர்.
மேலும் பஹத் பாசிலை வைத்து 'பாச்சுவும் அற்புத விளக்கும்' என்கிற படத்தை இயக்கிய இயக்குனர் அகில் சத்யன் (சத்யன் அந்திக்காடுவின் மகன்) தான் இந்த படத்திற்கு கதை எழுதி இருக்கிறார். அவரும் இந்த சந்திப்பில் இவர்களுடன் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
47 days ago
47 days ago