உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஐ அம் பேக் ; மீண்டும் இன்ஸ்டாகிராமுக்கு திரும்பிய ஸ்ருதிஹாசன்

ஐ அம் பேக் ; மீண்டும் இன்ஸ்டாகிராமுக்கு திரும்பிய ஸ்ருதிஹாசன்


தற்போதைய நாட்களில் திரையுலக நட்சத்திரங்கள் பெரும்பாலானோர் தங்களைப் பற்றிய பர்சனல் விஷயங்கள் மற்றும் தங்களது சினிமா குறித்த அப்டேட் தகவல்களை தெரிவிப்பதற்கும் ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதற்கும் சோசியல் மீடியாவை தான் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக நடிகைகள் பெரும்பாலும் இன்ஸ்டாகிராமில் தான் அதிகம் வலம் வருகின்றனர். நடிகை ஸ்ருதிஹாசனும் அப்படி இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பவர் தான். ஆனால் கடந்த ஜூன் மாதம் அவருடைய இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து இந்த தகவலை ரசிகர்களுக்கு தெரிவித்த ஸ்ருதிஹாசன், இதில் வெளியாகும் பதிவுகளை நான் பதிவிடவில்லை அதனால் தயவுசெய்து யாரும் என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கமெண்ட் செய்யவும் அவற்றை ஷேர் செய்யவும் வேண்டாம் என்று ஒரு எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

இந்த நிலையில் தற்போது அவரது இன்ஸ்டாகிராம் கணக்கு மீட்கப்பட்ட நிலையில் மீண்டும் இன்ஸ்டாகிராமுக்கு திரும்பியுள்ளார் ஸ்ருதிஹாசன். இது குறித்து 'ஐ மிஸ் யூ' மற்றும் 'ஐ அம் கம் பேக்; என இரண்டு விதமான பதிவுகளை தனது ஸ்டோரியில் வெளியிட்டு தனது வருகையை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார் ஸ்ருதிஹாசன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !