வேலு பிரபாகரனின் கடைசி படம்
ADDED : 94 days ago
வில்லன் நடிகர் மன்சூர் அலிகான், நடிக்கும்,யார் அந்த சார் படம்தான் சமீபத்தில் மறைந்த வேலு பிபரகாகரன் இயக்கிய கடைசி படம். அண்ணாமலை பல்கலைகழத்தில் ஒரு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பயன்படுத்தப்பட்ட 'யார் அந்த சார்' என்ற வாக்கியத்தை தலைப்பாக வைத்து அதையே கதை களமாக கொண்டு தயாராகி உள்ளது. இதில் அஹான் பாண்டே, நடிகை அனீத் பத்தா அனகா, ஸ்வாதி, கிறிஸ்டினா, அனிஷ் ஆகியோர் நடித்துள்ளனர். தற்போது வேலு பிரபாகரன் மறைந்து விட்ட நிலையில் மீதி காட்சிகளை மன்சூரலிகானே இயக்கி வருவதாக கூறப்படுகிறது. சபூரின் தயாரிப்பில், உருவாகும் இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.