பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர்
ADDED : 156 days ago
1970-80களில் மலையாள சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளராக இருந்தவர் ரவீந்திரன். ஆரம்பத்தில் மேடை கச்சேரிகளில் பாடிவந்த இவர், சினிமா இசை அமைப்பாளராக விரும்பினார். வாய்ப்பு தேடியதில் யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை. இதனால் டப்பிங் கலைஞர் ஆனார். அப்போதைய முன்னணி நடிகரான ரவிகுமாரின் படங்கள் அனைத்திற்கும் அவரே டப்பிங் பேசினார். தமிழில் மோகனுக்கு குரல் கொடுத்த எஸ்.என்.சுரேந்தர் போன்று இவர் ரவிகுமாருக்கு குரல் கொடுத்தார்.
இந்த டப்பிங் குரலால் ஈர்க்கப்பட்டு இயக்குனர் பரதன் இவருக்கு வாய்ப்பு கொடுத்தார். பின்னர் பாடகர் ஜேசுதாசின் நட்பு கிடைத்தது. அவரது சிபாரிசின் பேரில் பல வாய்ப்புகள் வந்தது. மலையாளத்தில் ஜேசுதாஸ் அதிகம் பாடியது இவரது இசை அமைப்பில்தான். பின்னர் 450 மலையாள படங்களுக்கும், ஹேமாவின் காதலர்கள் உள்ளிட்ட 6 தமிழ் படங்களுக்கும் இசை அமைத்தார்.