உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ்

இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ்

நடிகர் தனுஷ் தற்போது 'இட்லி கடை' எனும் படத்தை இயக்கி, நடித்துள்ளார் . நித்யா மேனன், ராஜ்கிரண், அருண் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 'டான் பிக்சர்ஸ், வுன்டர்பார் பிலிம்ஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கின்றார். இப்படம் இவ்வருடம் அக்டோபர் 1ம் தேதி அன்று திரைக்கு வருகிறது .

இந்த படத்திலிருந்து முதல் பாடல் வருகின்ற ஜூலை 28ந் தேதி தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு அதற்கு முந்தைய நாளான ஜூலை 27ம் தேதியன்று வெளியிடுவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் அவரது எக்ஸ் பக்கத்தில், இட்லி கடை படத்தின் முதல் பாடல் ஒரு அழகான காதல் பாடல். இந்த பாடலை தனுஷ் எழுதி, பாடியுள்ளார். அவருடன் இணைந்து ஸ்வேதா மோகனும் பாடியுள்ளார். இட்லி கடை இசை ஆல்பத்தில் தனக்கு மிகவும் பிடித்த பாடல் என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !