மேலும் செய்திகள்
கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல்
47 days ago
ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா?
47 days ago
வடிவேலு, பஹத் பாசில் நடித்த மாரீசன் படம், நாளை(ஜூலை 25) ரிலீஸ் ஆகிறது. முன்னதாக, இந்த படத்தின் சிறப்பு காட்சியை பார்த்துள்ளார் வடிவேலு. அதை தொடர்ந்து படத்தின் த யாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 98வது படம் மாரீசன். இதற்கு முன்பு இந்த நிறுவனம் தயாரித்த பல படங்களில் காமெடியனாக வடிவேலு நடித்துள்ளார். முதன்முறையாக இந்த படத்தில் கதை நாயகனாக வருகிறார்.
கதைப்படி அவர் கேரக்டர் முதற்பாதியில் அப்பாவியாகவும், பிற்பாதியில் வேறு மாதிரியாகவும் இருக்கும். அதனால்தான், இந்த கதையில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டார். மாமன்னன் மாதிரி குணசித்திர நடிப்பில் இந்த படம் வடிவேலுக்கு பெயர் வாங்கிக் கொடுக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் தான், இன்னமும் அடுத்த படம் குறித்த அறிவிப்புகளை வெளியிடாமல் வடிவேலு காலம் தாழ்த்துகிறாராம். மாரீசனுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அடுத்து காமெடியனா? கதை நாயகனா என வடிவேலு முடிவெடுப்பாராம்.
47 days ago
47 days ago