மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
69 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
69 days ago
ஒவ்வொரு ஹீரோவுக்கும் அவர்களது திரையுலக பயணத்தில் மைல்கல் என்று சொல்லும் விதமாக ஒரு படம் அமைந்துவிடும். அப்படி மறைந்த நடிகர் விஜயகாந்த்துக்கு அமைந்த அவரின் 100வது படம் 'கேப்டன் பிரபாகரன்'. ஆர்கே செல்வமணி இயக்கிய இந்த படத்தில் சரத்குமார், மன்சூர் அலிகான், ரூபிணி, ரம்யா கிருஷ்ணன் மற்றும் லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்தார்.
அதுமட்டுமல்ல, காலத்திற்கும் நிலைக்கும் விதமாக கேப்டன் என்கிற அடைமொழியையும் சேர்த்து அவருக்கு பரிசளித்தது கேப்டன் பிரபாகரன். இந்த படம் வெளியாகி 34 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் விதமாக ரீ-ரிலீஸ் ஆக இருக்கிறது. 4கே தரத்திலும் மற்றும் 7.1 சவுண்ட் மிக்ஸிங் முறையிலும் ரீமாஸ்டர் செய்யப்பட்டு வெளியாகிறது. ஆக., 25ல் விஜயகாந்த் பிறந்தநாள், அதை முன்னிட்டு ஆக., 22ல் இந்த படத்தை வெளியிடுகின்றனர். சுமார் 500 தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
69 days ago
69 days ago