உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சென்னை குற்ற சம்பவ பின்னணியில் உருவான 'சென்னை பைல்ஸ்'

சென்னை குற்ற சம்பவ பின்னணியில் உருவான 'சென்னை பைல்ஸ்'

சின்னதம்பி புரொடக்ஷன் சார்பில் மகேஸ்வரன் தேவதாஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் 'சென்னை பைல்ஸ் : முதல் பக்கம்'. வெற்றி, ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா, மகேஷ் தாஸ், ரெடின் கிங்ஸ்லி, சுபத்ரா, அனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனீஸ் அஷ்ரப் இயக்கியுள்ளார். அரவிந்த் ஒளிப்பதிவு செய்ய, ஏஜிஆர் இசையமைத்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாகிறது.

படம் குறித்து இயக்குனர் அனீஸ் அஷ்ரப் கூறியதாவது: நான் ஏ.ஆர். முருகதாஸிடம் உதவியாளராக பணிபுரிந்தேன். மிஷ்கின் இயக்கிய 'பிசாசு ' படத்தைக் கன்னடத்தில் இயக்கி இருக்கிறேன். தமிழில் முதன் முதலாக இயக்கி இருக்கும் படம் இது. சென்னையில் நடைபெற்ற ஒரு குற்றச் சம்பவத்தின் முதல் பக்கத்தில் இடம் பிடித்திருக்கும் தகவல் என வைத்துக் கொள்ளலாம். இந்தப் படத்தில் ஒரு சமூக கருத்துடன் கதையையும், திரைக்கதையையும் உருவாக்கி இருக்கிறேன். கிரைம் த்ரில்லராக நிறைய படங்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த படம் அவற்றிலிருந்து மாறுபட்டு இருக்கும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !