உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள்

பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள்

தெலுங்கில் நானி தயாரிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் 'கோர்ட் ஸ்டேட் vs நோ படி'. குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் பல மடங்கு வசூலைக் குவித்தது. இந்த படம் தமிழில் ரீ-மேக் ஆகிறது. இதன் உரிமையை நடிகர் பிரசாந்த்தின் அப்பா, இயக்குனர் தியாகராஜன் வாங்கியுள்ளார். இந்த படத்தை தமிழில் தியாகராஜன் இயக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.

ஆனால், இந்த படத்தில் பிரியதர்ஷி கதாபாத்திரத்தில் பிரசாந்த் மற்றும் சாய் குமார் கதாபாத்திரத்தில் தியாகராஜன் நடிப்பது உறுதியாகியுள்ளது. மேலும், மற்ற முதன்மை கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர் 5 ஸ்டார் கதிரேசனின் மகன் கிரித்திக் மற்றும் ராஜ்குமார், தேவையாணி தம்பதியினரின் மகள் பிரியங்கா ஆகிய இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !