தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு?
ADDED : 119 days ago
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் இணைந்து நடித்துள்ள படம் தலைவன் தலைவி. நேற்று திரைக்கு வந்துள்ள இப்படம் கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் பிரிவு, சண்டை, குடும்ப உறவுகள் குறித்து பேசும் கதையில் உருவாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வரும் இந்த படம் முதல்நாளில் உலக அளவில் 12 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் தெரிவிக்கிறது.
அதேபோல் மாமன்னன் படத்திற்கு பிறகு வடிவேலு, பஹத் பாசில் நடிப்பில் நேற்று திரைக்கு வந்த இன்னொரு படம் மாரீசன். சுதீஷ் சங்கர் என்பவர் இயக்கி உள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. முதல் நாளில் உலக அளவில் 2.2 கோடி வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் தெரிவிக்கிறது.