மணிகண்டனை இயக்கும் தியாகராஜன் குமார ராஜா
ADDED : 119 days ago
ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் போன்ற வித்தியாசமான படங்களைக் இயக்கியவர் தியாகராஜன் குமார ராஜா. சூப்பர் டீலக்ஸ் வெளியாகி 6 வருடங்கள் கடந்த நிலையிலும் இன்னும் தனது அடுத்த படம் எந்தவொரு அப்டேட் வெளியிடவில்லை. தியாகராஜன் குமார ராஜா. ஒவ்வொரு படத்திற்கும் இடையே தியாகராஜன் குமார ராஜா நீண்ட இடைவெளி எடுத்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது. தியாகராஜன் குமார ராஜா அடுத்து புதிதாக இயக்கவுள்ள படத்தில் கதாநாயகனாக மணிகண்டன் நடிக்கவுள்ளார். இதற்கு கூடுதல் திரைக்கதையை மணிகண்டனே எழுதியுள்ளார் என்கிறார்கள். மேலும், இந்த படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் மோகன்லால் உடன் பேச்சுவார்த்தையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.