மேலும் செய்திகள்
பாலிவுட்டில் அறிமுகமாகும் மீனாட்சி சவுத்ரி
61 days ago
லோகா படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு
61 days ago
'ஓஜி' வரவேற்பு : ஸ்ரேயா ரெட்டி மகிழ்ச்சி
61 days ago
ஒரு படம் தயாரிக்க தொடங்கி பல்வேறு காரணங்களால் தாமதமானால் அந்த படம் பொருளாதார இழப்பை சந்திக்கும் என்பது தெரியும். ஆனால் அதையும் தாண்டி பல இழப்புளை சந்தித்த படம் 'சுதர்ஷன்'. ஒரே கதையை ஒரே நேரத்தில் இரண்டு தயாரிப்பாளர்கள் தயாரிப்பது அந்த காலத்தில் சகஜம் அப்படி ஒரே நேரத்தில் தயாரான படங்கள் ஜெமினின் 'சக்ரதாரி', ராயல் டாக்கீசின் 'சுதர்ஷன்'.
'சக்ரதாரி' படத்தை ஒரு வருடத்திற்குள் தயாரித்து வெளியிட்டது ஜெமினி பிலிம்ஸ் இதனால் படம் பெரிய வெற்றி பெற்றது. ஆனால் 'சுதர்ஷன்' படம் பல காரணங்களால் தாமதமாகி 3 வருடங்களுக்கு பிறகு வெளியானது. 'சக்ரதாரி' வெற்றி பெற்றதால் இந்த படம் 'அந்த அளவிற்கு இல்லை' என்ற விமர்சனத்தால் படம் தொல்வி அடைந்தது. படத்தில் முதலில் நாயகியாக நடித்த பாடகி எம்.எல்.வசந்தகுமாரி படத்தில் இருந்து விலகினார். இதனால் மங்களம் என்ற நடிகையை வைத்து அவரது காட்சிகள் மீண்டும் படமாக்கப்பட்டது.
இயக்குனர் சுந்தர் ராவ் நட்கர்னி விலகி கொள்ள ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கினார், படம் வெளிவருவதற்கு முன்பே படத்தில் நாயகனாக நடித்த பி.யு.சின்னப்பா அகால மரணம் அடைந்தார். இந்த படத்தில் பி.யு.சின்னப்பா, கண்ணாம்பா, (யோகம்) மங்களம், லலிதா, டி.எஸ்.பாலையா, டி.பாலசுப்ரமணியம், பி.பி.ரங்காச்சாரி மற்றும் சி.கே.சரஸ்வதி உள்பட பலர் நடித்தனர். ஒருவரை மணந்த இரண்டு மனைவிகளின் கதை.
61 days ago
61 days ago
61 days ago