உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம்

பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம்


இப்போதெல்லாம் பார்ட் 2 படங்கள் சர்வசாதாரணமாகி விட்டது. இப்போது கூட 'ஜெயிலர் 2, சர்தார் 2, வடசென்னை 2' தயாராகி வருகிறது. ஆனால் தமிழ் சினிமாவின் முதல் பார்ட் 2 படம் 'ஜப்பானில் கல்யாண ராமன்'. 40 வருடங்களுக்கு முன்பு வெளியான படம். 1979ம் ஆண்டு பி.ஏ.ஆர்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் பஞ்சு அருணாசலம் தயாரித்து, கமல் இரட்டை வேடங்களில் நடித்த படம் 'கல்யாணராமன்'. மிகப்பெரிய வெற்றிப்படம். 6 வருடங்களுக்கு பிறகு 'ஜப்பானில் கல்யாணராமன்' என்ற பெயரில் இதன் இரண்டாம் பாகம் வெளிவந்தது.

அப்பாவியான கல்யாண ராமனை வில்லன்கள் கொன்று விட ஹீரோ கமல் கொன்றவர்களை பழிவாங்கி அவரது காதலிக்கு வாழ்க்கை கொடுப்பது முதல் பாக கதை. இரண்டாம் பாகத்தில் கமல் ஜப்பானுக்கு ஒரு பிரிண்டிங் மிஷின் வாங்க செல்லும்போது வில்லன் சத்யராஜ் அவரை தீர்த்துக்கட்ட திட்டம்போட ஆவியாக இருக்கும் கல்யாண ராமன் அவரை காப்பாற்றுவது மாதிரியான கதை. முதல் பாக நாயகி, ஸ்ரீதேவி. இரண்டாவது பாக நாயகி ராதா.

முதல் பாகம் ஊட்டியில் படமானது. இரண்டாம் பாகம் ஜப்பானில் படமானது. இரண்டையும் எஸ்.பி.முத்துராமன் இயக்கினார், திரைக்கதை வசனம் எழுதி தயாரித்தார் பஞ்சு அருணாசலம். முதல் பாகம் அளவிற்க இரண்டாம் பாகம் வெற்றி பெறவில்லை என்றாலும் தயாரிப்பாளருக்கு லாபம் கொடுத்த படம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !