மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
66 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
66 days ago
அறிமுக இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார், சரத்குமார், சுரபி, மந்த்ரா பேடி, யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில் 2018ல் உருவாகி முடிந்த படம் 'அடங்காதே'. 2018ல் டிரைலர் வெளியானது. படம் தணிக்கைக்குச் சென்ற போது பல 'கட்'களைக் கொடுத்தனர். அதனால், பட வெளியீடு சிக்கலுக்கு ஆளானது. அதற்கடுத்து சிலமுறை படத்தை வெளியிட முயன்று அது நடக்காமல் போனது. இந்நிலையில் ஆகஸ்ட் 27ல் இப்படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
அப்படத்தின் தாமதம் காரணமாக இயக்குனர் சண்முகம் முத்துசாமி, 'டீசல்' படத்தை இயக்க ஆரம்பித்தார். ஹரிஷ் கல்யாண், அதுல்யா மற்றும் பலர் நடிக்கும் அந்தப் படத்தில் இடம் பெற்ற 'பச்சை குத்திக்கினு' பாடல் சூப்பர் ஹிட் ஆனது. தற்போது 66 ல்லியன் பார்வைகளை அந்தப் பாடல் பெற்றுள்ளது. அந்தப் பாடலில் இடம் பெற்ற 'ம்ம்ம்ம்ம்ம்..' என்ற ஹம்மிங்கை வைத்து நிறைய ரீல்ஸ்களும் வெளியாகி உள்ளன.
66 days ago
66 days ago