'சாயரா' இந்தியாவில் நிகர வசூல் 250 கோடி
மோகித் சூரி இயக்கத்தில், அஹான் பான்டே, அனீத் பட்டா நடிப்பில் வெளியான ஹிந்தித் திரைப்படம் 'சாயரா'. இப்படம் கடந்த 11 நாட்களில் இந்தியாவில் நிகர வசூலாக 250 கோடியைக் கடந்துள்ளது. அதன் மொத்த வசூல் இந்திய வசூல் 300 கோடியை நெருங்கிவிட்டது. வெளிநாடுகளில் இப்படம் மொத்த வசூலாக 77 கோடியை வசூலித்துள்ளது. மொத்தமாக உலக அளவில் 372 கோடி வசூலைக் கடந்துள்ளதாக பாலிவுட் பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டில் இதுவரையில் வெளிவந்த இந்தியத் திரைப்படங்களில் ஹிந்திப் படமான 'ச்சாவா' படம் சுமார் 800 கோடி மொத்த வசூலைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்து 'சாயரா' படம் 372 கோடி வசூலுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அறிமுக நடிகர்களின் படம் இந்த அளவு வசூலைக் குவித்து பாலிவுட் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த வார இறுதிக்குள் இப்படம் 400 கோடி வசூலைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் மொத்த பட்ஜெட் 50 கோடி மட்டுமே என்கிறார்கள்.
பாலிவுட்டின் அடுத்த வாரிசு நடிகராக தனது முதல் படத்திலேயே பெரும் வெற்றி பெற்றுள்ளார் அஹான் பான்டே.