மேலும் செய்திகள்
'டிரெயின்' படத்திற்காக களத்தில் இறங்கிய தாணு!
52 days ago
'ஓ.ஜி' படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
52 days ago
நவீன் டி கோபால் இயக்கத்தில் அசுரனில் நடித்த டிஜே அருணாசலம், ஜனனி நடித்த படம் 'உசுரே'. இந்த படக்குழுவினர் சமீபத்தில் கமல்ஹாசனை சந்தித்து பேசி இருக்கிறார்கள். தங்கள் படத்தின் கதையை சொல்ல, தங்கள் குழுவை அறிமுகப்படுத்தி வாழ்த்து பெற்று இருக்கிறார்கள். சின்ன படக்குழு கமலை சந்தித்தது எப்படி என்று விசாரித்தால், இதில் ஹீரோயினாக நடித்தவர் ஜனனி, இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர், கமல்ஹாசன் அன்பை பெற்றவர். அந்த பழக்கத்தில் தனது படக்குழுவை அழைத்து சென்று வாழ்த்து பெற வைத்து இருக்கிறார்.
இந்த படத்தில்தான் ஹீரோயின் அம்மாவாக மந்திரா நடித்துள்ளார். சில உண்மை சம்பவம் அடிப்படையில் இந்த கதை உருவாகி உள்ளது. அரசியல், சினிமா பணிகளுக்கு நடுவில் ஜனனிக்காக இந்த படக்குழுவை சந்தித்து பேசி இருக்கிறார் கமல்ஹாசன் என்கிறார்கள். சென்னை ஆழ்வார்பேட்டையில் அதி நவீன ஆபீஸ் கட்டியிருக்கிறார் கமல், அங்கே முக்கியமானவர்களை சந்திக்கிறார். மற்றவர்களை, தற்போது மக்கள் நீதி மய்யம் ஆபிஸ், தனது பழைய வீடாக இருந்த கட்டடத்தில் சந்திக்கிறார்.
52 days ago
52 days ago