உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

குபேரா படத்தை அடுத்து தான் இயக்கி நடித்திருக்கும் இட்லி கடை படத்தின் இறுதி கட்டப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் தனுஷ். இதற்கிடையே அவர் நடிக்கும் 54 வது படத்தின் படப்பிடிப்பும் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. போர் தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இதை இயக்குகிறார். தனுசுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இப்படத்தில் தனுஷ் தற்போது நடித்து வருவதை அடுத்து படப்பிடிப்பு தளத்தில் எடுத்த ஒரு புகைப்படத்தை இந்த படத்தை தயாரிக்கும் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் ஒரு பழைய எஸ்டிடி பூத்தில் தனுஷ் போன் பேசிக் கொண்டிருக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !