ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு
ADDED : 103 days ago
தெலுங்கில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக தேவரா என்ற படத்தில் நடித்தார் ஜான்வி கபூர். தற்போது ராம் சரணுக்கு ஜோடியாக பெத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஹிந்தியில் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு ஜோடியாக பரம் சுந்தரி என்ற படத்திலும் அவர் நடித்துள்ளார். துஷார் ஜெலோட்டா என்பவர் இயக்கியுள்ள இந்த படம் வட இந்தியா பையனுக்கும், தென்னிந்தியா பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதலை மையமாகக் கொண்ட கதையில் உருவாகியுள்ளது. இப்படத்தை ஜூலை 25ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்த படக்குழு, சாயரா படத்தினால் பின்வாங்கியவர்கள், தற்போது ஆகஸ்ட் 29ம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளார்கள். அதோடு இன்று பரம் சுந்தரி படத்தின் முதல் பாடலும் வெளியிடப்பட்டுள்ளது.