உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பெண் கூறிய குற்றச்சாட்டுக்கு விஜய்சேதுபதி பதில்

பெண் கூறிய குற்றச்சாட்டுக்கு விஜய்சேதுபதி பதில்

நடிகர் விஜய் சேதுபதி தமிழில் மட்டுமல்லாது தென்னிந்திய அளவில் மிக பிரபலமான நடிகராக இருக்கிறார். ஜவான் படம் மூலமாக பாலிவுட்டிலும் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்து விட்டார். கடந்த வருடம் மகாராஜா, இந்த வருடம் சமீபத்தில் வெளியான தலைவன் தலைவி என வருடத்திற்கு குறைந்தது ஒரு வெற்றி படத்தை தரும் அளவிற்கு நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் ரம்யா மோகன் என்கிற பெண் தனது எக்ஸ் பக்கத்தில் விஜய்சேதுபதி மீது, வேறு ஒரு நடிகை அவர் தன்னுடைய தேவைகளுக்காக பயன்படுத்தி வந்தார் என்றும் அந்த நடிகை தற்போது போதை மீட்பு மறுவாழ்வு மையத்தில் இருக்கிறார் என்றும் இன்னும் சில விஷயங்களையும் கூறி குற்றச்சாட்டாக வைத்திருந்தார். இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த பெண் தனது பதிவை உடனடியாக நீக்கியும் விட்டார்.

இந்த நிலையில் சமீபத்திய ஒரு பேட்டியின் போது, இது பற்றி விஜய்சேதுபதியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “என்னை தெரிந்த அனைவருமே அவர்கள் எங்கிருந்தாலும் இதைக் கேட்டால் சிரிப்பார்கள். என்னைப் பற்றி எனக்கே கூட நன்றாக தெரியும். இது போன்ற மோசமான குற்றச்சாட்டு என்னை ஒருபோதும் அப்செட் பண்ணாது. ஆனால் என்னுடைய உறவினர்களும் நெருங்கிய நண்பர்களும் கொஞ்சம் கவலைப்பட்டார்கள்.

ஆனால் அவர்களிடம் இதை அப்படியே விட்டு விடுங்கள். அந்த பெண்ணுக்கு இதுபோன்று குற்றச்சாட்டை என் மீது கூறி, அதனால் சில நிமிடங்கள் கிடைக்கும் தனக்கு அந்த விளம்பரத்தை அந்த பெண் என்ஜாய் செய்து விட்டு போகட்டுமே” என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து சைபர் கிரைமிலும் புகார் அளித்துள்ளதாகவும் ஏழு ஆண்டுகளாக இது போன்று பல மோசமான பிரச்சாரங்களை சந்தித்து வருவதாகவும் அவை எல்லாமே தன்னை எந்த அளவிலும் பாதிக்கவில்லை என்றும் நான் ஒருபோதும் வீழ மாட்டேன் என்றும் கூறியுள்ளார் விஜய் சேதுபதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !