மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
62 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
62 days ago
2025ம் ஆண்டின் 7 மாதங்கள் நேற்றோடு முடிந்த நிலையில், இன்று 8வது மாதமான ஆகஸ்ட் 1ம் தேதியில் 7 படங்கள் வெளியாகி இருக்கின்றன. “அக்யூஸ்ட், போகி, ஹவுஸ் மேட்ஸ், மிஸ்டர் ஜு கீப்பர், முதல் பக்கம், சரண்டர், உசுரே” ஆகிய படங்கள் இன்று வெளியான படங்கள். ஒரே நாளில் இத்தனை படங்கள் வெளியானதால் இருக்கும் தியேட்டர்களில் காட்சிகளை மட்டுமே இந்தப் படங்கள் பங்கு போட்டுக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே கடந்த வாரம் வெளியான 'தலைவன் தலைவி, மாரீசன்' ஆகிய படங்கள் இரண்டாவது வாரத்திலும் 100க்கும் அதிகமான தியேட்டர்களில் தமிழகத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றன. அவற்றோடு ஹாலிவுட் படங்கள், ஹிந்திப் படங்கள், மற்ற மொழிப் படங்கள் ஓடிக் கொண்டிருக்கும் தியேட்டர்கள் போக மற்ற தியேட்டர்கள் தான் இன்று வெளியான படங்களுக்குக் கிடைத்துள்ளன.
ஒரே தியேட்டரில் மொத்தமாக 4 காட்சிகளையும் பெறும் அளவிற்கு இந்தப் படங்களுக்குக் காட்சிகள் கிடைக்கவில்லை. ஒரு சில காட்சிகள் மட்டுமே கிடைத்துள்ளன. சில வெளியூர்களில் மட்டும் சிறிய தியேட்டர்களில் சில படங்களுக்கு அனைத்துக் காட்சிகளும் கிடைத்துள்ளன.
இந்தப் படங்களின் ஆன்லைன் முன்பதிவு நிலவரத்தைப் பார்த்தால் கலவரமாகவே உள்ளது. ஒரு படத்திற்குக் கூட பத்து டிக்கெட்டுகளுக்கு மேல் முன்பதிவு செய்யப்படவில்லை. கடந்த வாரம் வெளியான படங்களை விடவும் இந்தப் படங்களுக்குக் குறைவான டிக்கெட்டுகளே முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. சில படங்களுக்கு அந்த சில டிக்கெட்டுகள் கூட முன்பதிவு செய்யப்படவில்லை.
தமிழ் சினிமாவில் சிறிய படங்களின் நிலை இந்த அளவிற்கு போய்விட்டது. ஓரளவு நட்சத்திர அந்தஸ்து இருக்கும் படங்களுக்குத்தான் ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வருகிறார்கள். அதைப் புரிந்து தங்களது படங்களில் அப்படியான அந்தஸ்துள்ள நடிகர்களை நடிக்க வைத்தால் சில நாட்களாவது படங்கள் தாக்குப்பிடிக்கும். ரசிகர்களை தியேட்டர்களுக்கு வரவழைக்கும் ரகசியத்தை தெரிந்து கொண்டு படங்களைத் தயாரிக்க வருவதே சிறப்பு. இல்லையென்றால் தவிப்பு தான் ஏற்படும்.
62 days ago
62 days ago