உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தலைவன் தலைவி 50 கோடி வசூல் என அறிவிப்பு

தலைவன் தலைவி 50 கோடி வசூல் என அறிவிப்பு

பாண்டிராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில், விஜய் சேதுபதி, நித்யா மேனன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'தலைவன் தலைவி'. இப்படம் முதல் மூன்று நாட்களில் 25 கோடி வசூலித்ததாகத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்கள்.

படம் வெளியாகி ஒரு வாரம் முடிந்த நிலையில் 50 கோடி வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளார்கள். விஜய் சேதுபதி நடித்து 'மகாராஜா' படத்திற்குப் பின் இந்தப் படம் 50 கோடி வசூலைக் கடந்துள்ளது. குடும்பப் பாங்கான படங்களுக்கு இந்த வருடத்தில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அது இந்தப் படத்திற்கும் தொடர்ந்துள்ளது.

இப்படத்துடன் வெளியான 'மாரீசன்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும, அந்தப் படத்தை ரசிகர்களிடம் இன்னும் அதிகமாகக் கொண்டு போய் சேர்க்க தயாரிப்பு நிறுவனம் தவறிவிட்டது. எந்தவிதமான நிகழ்ச்சியும் அந்தப் படத்திற்காக நடைபெறவில்லை. அதில் படக்குழுவினர் யாரும் அக்கறையும் காட்டவில்லை.

'தலைவன் தலைவி' படம் இன்று 'சார் மேடம்' என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !