ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி
ADDED : 100 days ago
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படம் வருகிற 14ம் தேதி திரைக்கு வருகிறது. இதனால் தற்போது இப்படத்தின் பிரமோஷனில் தீவிரம் அடைந்து இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். மேலும் நாளை இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் நெல்சன் இயக்கி வரும் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். சென்னை மற்றும் கேரளாவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. தற்போது படப்பிடிப்பு இடைவெளியில் ஓய்வு எடுத்து வரும் ரஜினிகாந்த், நாளை கூலி பட விழாவை முடித்துவிட்டு அடுத்த வாரத்தில் மீண்டும் ஜெயிலர் 2 படப்பிடிப்பிற்காக கேரளா புறப்பட்டு செல்கிறார். அதனால் கூலி படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வரும்போது கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினி இருப்பார் என்பது தெரியவந்துள்ளது.