பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா
ADDED : 147 days ago
தெலுங்கில் சுபம் என்ற படத்தை தயாரித்து கெஸ்ட் ரோலில் நடித்திருந்த சமந்தா, அடுத்து மா இண்டி பங்காரம் என்ற படத்தில் கதையின் நாயகியாக நடிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை நந்தினி ரெட்டி இயக்கப் போகிறார். அதோடு தற்போது ஹிந்தியில் உருவாகி வரும் தி பிளடி கிங்டம் என்ற வெப் சீரியலில் நடித்து வரும் சமந்தா, தனது உடல் எடையை பெரிய அளவில் குறைத்து ஸ்லிம்மான தோற்றத்துக்கு மாறியுள்ளார். தனது பிட்னஸ் ரகசியம் குறித்த ஒரு தகவலையும் வெளியிட்டு இருக்கிறார். அதில், தற்போது தான் பதப்படுத்தப்பட்ட உணவுகளை மட்டுமே எடுத்துக் கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். அதோடு காலிபிளவர், ப்ரோக்கோலி போன்ற ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களை மட்டுமே எடுத்துக் கொண்டு வருவதாக கூறியுள்ள சமந்தா, கீரை உணவுகளை சுத்தமாக தவிர்த்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.