இரண்டாவது முறை தேசிய விருது பெறும் ஊர்வசி
ADDED : 101 days ago
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தவர் ஊர்வசி. நகைச்சுவை, குணச்சித்திரம் என எந்தவிதமான கதாபாத்திரங்களிலும் அவரது நடிப்புத் திறமையை சிறப்பாக வெளிப்படுத்துவார்.
இரண்டாவது முறையாக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளார். அவர் நடித்து மலையாளத்தில் வெளிவந்த 'உள்ளொழுக்கு' படத்திற்கு அந்த விருது வழங்கப்படுகிறது. இதற்கு முன்பு 'அச்சுவின்டே அம்மா' படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை முதல் முறை பெற்றார்.
இருபது வருட இடைவெளிக்குப் பிறகு இரண்டாவது முறை தேசிய விருதைப் பெறும் ஊர்வசிக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.