உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 36 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படத்திற்கு 'ஏ' சான்றிதழ்

36 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படத்திற்கு 'ஏ' சான்றிதழ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கூலி' படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இந்தப் படத்தைப் பார்க்க முடியும். பொதுவாக ரஜினி படம் என்றாலே குழந்தைகள், பெண்கள் என பலரும் விரும்பிப் போய்ப் பார்ப்பார்கள். ஆனால், 'கூலி' படத்திற்கு 'ஏ' சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளதால், குழந்தைகளுடன் குடும்பத்துடன் சென்று பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் நடித்து கடைசியாக 1989ம் ஆண்டு வெளிவந்த 'சிவா' படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டது. அதற்குப் பிறகு கடந்த 36 ஆண்டுகளாக அவரது படங்களுக்கு அந்த சான்று கிடைத்ததில்லை. குடும்பத்துடன் பார்க்கும்படியாக 'யு' சான்றிதழ் படங்கள்தான் இருந்தது. ஒரு சில படங்கள் 'யு/ஏ' சான்று பெற்றவை.

'கூலி' படத்திற்கு 'ஏ' சான்றிதழ் என்பதால் வசூலும் குறைய வாய்ப்புள்ளது. குழந்தைகளை வீட்டில் விட்டு படம் பார்க்க வருவதற்கு பெண்கள் தயங்குவார்கள். ஆண்கள் மட்டுமே தியேட்டர் பக்கம் வந்தால் வசூல் அதிகம் கிடைக்காது. இதனால், ரஜினி ரசிகர்கள் படத்தை மறுதணிக்கைக்கு அனுப்பி 'யு-ஏ' சான்றிதழாவது பெறுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !