உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம்

வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம்

அனிமேஷன் படத்திற்கென்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். தனி வியாபார வட்டமும் இருக்கிறது. ஐஸ் ஏஜ், ஜங்கிள் புக் மாதிரியான அனிமேஷன் படங்களில் இந்தியாவில் பெரும் வசூல் குவித்தவை. முதன் முறையாக இந்தியாவில் தயாராகி வெளியாகி இருக்கும் 'மஹாவதார்: நரசிம்மா' படம் வசூலை குவித்து வருகிறது. விஷ்ணுவின் 10 அவதாரங்களில் ஒன்றான நரசிம்ம அவதார கதையை சொல்லும் இந்த படம் நேர்த்தியான தொழில்நுட்பம், துல்லியமான 3டி அனிமேஷன் இவற்றால் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

படம் வெளியான முதல் வாரத்தில் இந்தியாவில் 53 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறது என்று தயாரிப்பு தரப்பு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. அடுத்த வார இறுதிக்குள் 200 கோடி வசூலை எட்டும் என்கிறார்கள்.

ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் 'காந்தாரா', 'கே ஜி எப் 'மற்றும் ' சலார் ' ஆகியவற்றை தொடர்ந்து இந்த படமும் இந்த வரிசையில் இணைந்துள்ளது. தற்போது அடுத்த அவதார கதை விறுவிறுப்பாக படமாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !