வாசகர்கள் கருத்துகள் (4)
அற்புதமான நடிகர்.
ஆம்பளைங்க அஜேஸ்ட்மேன் செய்ய முடியாதே?
correct! he's the real GOAT.
very versatile legend with exceptional acting skills
'சின்ன பாப்பா பெரிய பாப்பா' என்ற தொடரின் மூலம் நடிகராகி பின்னர் சினிமா நடிகரானவர் டங்பிங் கலைஞராக இருந்த எம்.எஸ்.பாஸ்கர். இப்போது அவருக்கு 'பார்க்கிங்' படத்தில் நடித்தற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடுத்தர வயதை தாண்டினாலும் ஒரு இளைஞனோடு ஈகோ மோதல் நடத்தும் ஒருவரை அப்படியே திரையில் பிரதிபலித்தற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் எம்.எஸ்.பாஸ்கர் இதைவிட அற்புதமான கேரக்டரில் நடித்திருக்கிறார். அவைகள் விருதை நோக்கிச் செல்லவில்லை, அல்லது விருது தரப்படவில்லை. அப்படியான கேரக்டரில் ஒரு சிலவற்றை பார்க்கலாம்.
'மொழி' படம் தான் அவருக்கு பெரிய அடையாளம் கொடுத்த படம். விபத்தில் மகனை பறிகொடுத்து விட்டு 20 வருட நினைவுகளை மறந்த ஒரு தந்தையாக நடித்திருந்தார்.
'பயணம்' படத்தில் கடத்தப்பட்ட விமானத்தில் பாதிரியாக நடித்திருப்பார். 'இந்த விமானத்தில் இருப்பர்கள் குடும்பஸ்தர்கள் நான் எதுவும் இல்லாதவன் என் உயிரை எடுத்துகிட்டு இவுங்கள விட்டுருய்யா' என்று கடத்தல்கார்களிடம் கெஞ்சும் காட்சியில் ஆடியன்சை கதற விட்டிருப்பார்.
'சூதுகவ்வும்' படத்தில் எளிமையான அரசியல்வாதியாக நடித்து 'இப்படி எல்லா அரசியல்வாதியும் இருக்க மாட்டார்களா' என்று ஏங்க வைத்திருப்பார். 'அஞ்சாதே' படத்தில் கண்டிப்பான போலீஸ் அப்பாவாக வாழ்ந்தார்.
'மதராசப்பட்டணம்' படத்தில் சுதந்திர போராட்டத்தில் உயிரிழந்த மகனின் தந்தையாக, சலவைத் தொழிலாளியாக வாழ்ந்து காட்டினார். 'அரிமா நம்பி'யில் போலீஸ் கான்ஸ்டபிள். 'துப்பாக்கி முனை'யில் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் தந்தை, 'டாணாக்காரன்' படத்தில் 28 வருடமாக கான்ஸ்டபிளாகவே இருக்கும் 5 பெண் குழந்தைகளின் தந்தை, எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தது மாதிரி '8 தோட்டாக்கள்' படத்தின் கேரக்டர். தவறாக சுட்டுவிட்ட ஒரு சிறுமியின் வாழ்க்கையை நினைத்து கதறும் கேரக்டர்.
இவைகள் சின்ன உதாரணங்கள்தான். 'பார்க்கிங்' போன்று அவர் நடித்ததில் பார்க்க வேண்டிய படங்கள் நிறைய இருக்கிறது. சில நடிகர்கள் சிரிக்க வைப்பார்கள், சில நடிகர்கள் அழ வைப்பார்கள், சிலர் ரசிக்க வைப்பார்கள். இந்த மூன்றையும் செய்யக்கூடியவர் எம்.எஸ்.பாஸ்கர்.
அற்புதமான நடிகர்.
ஆம்பளைங்க அஜேஸ்ட்மேன் செய்ய முடியாதே?
correct! he's the real GOAT.
very versatile legend with exceptional acting skills