கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம்
கடந்த 2013ம் ஆண்டு ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் ஹிந்தியில் நாயகனாக அறிமுகமான படம் ராஞ்சனா. இந்த படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியானது. அவருக்கு ஜோடியாக சோனம் கபூர் நடித்திருந்த இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. இப்படம் திரைக்கு வந்து 12 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று ரீரிலீஸ் செய்துள்ளார்கள். இந்த படத்தின் கிளைமேக்ஸை ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் மாற்றி வெளியிட்டுள்ளார்கள்.
ஆனால் இப்படத்தின் இயக்குனரான ஆனந்த் எல்.ராய் இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இந்த படத்தின் ரீரிலீஸ் பற்றியோ, கிளைமேக்ஸை மாற்றுவது குறித்தோ என்னிடம் எதுவும் கேட்காமலேயே மாற்றி வெளியிட்டு எனது படைப்பை அவமரியாதை செய்து விட்டார்கள். மன உளைச்சலில் உள்ளேன். இது புதுமை அல்ல அவமானம் என்று அப்படக்குழுவை குற்றம் சாட்டியுள்ளார்.
ராஞ்சனா படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் அட்ரங்கி ரே என்ற படத்தை இயக்கிய ஆனந்த் எல்.ராய் தற்போது தேரே இஸ்க் மெயின் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் நவம்பர் மாதம் திரைக்கு வருகிறது.