உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான்

முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான்

2023ம் ஆண்டில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வெளியான படம் ஜவான். நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்தார்கள். இந்த படம் 1,148 கோடி ரூபாய் வசூலித்தது. நேற்றைய தினம் 71 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதில் ஜவான் படத்தில் நடித்துள்ள ஷாருக்கானுக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது. குறிப்பாக அவர் நடிக்க வந்து 33 ஆண்டுகளில் இப்போதுதான் முதல் முறையாக தேசிய விருது பெறுகிறார். இதையடுத்து தனக்கு தேசிய விருது கிடைக்க காரணமாக இருந்த இயக்குனர் அட்லிக்கு தனது நன்றியை தெரிவித்து ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார் நடிகர் ஷாருக்கான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !