அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‛கூலி'. ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சவுபின் சாகிர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் அமீர்கானும் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் இன்று இரவு 7 மணிக்கு வெளியானது. 3:02 நிமிடம் ஓடக் கூடிய இந்த டிரைலரில் மாஸான அதிரடியாக ஆக் ஷன் காட்சிகள் நிறைந்துள்ளன.
டிரைலரில் படத்தில் வரும் பிரதான நடிகர்களான சத்யராஜ் அவரின் மகளாக நடித்துள்ள ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் சாகிர் மற்றும் சிறப்பு ரோலில் வரும் அமீர்கான் கூட வந்து போகிறார்கள். டிரைலர் முழுக்க முழுக்க ஆக் ஷன் காட்சிகள் தான் நிறைந்து உள்ளன. அதோடு படத்தின் மைய கருவாக விலையுர்ந்த கை கடிகாரம் மற்றும் துறைமுகம் சார்ந்த விஷயங்கள் இருக்கும் என தெரிகிறது. அதுதொடர்பான காட்சிகளும் டிரைலரில் உள்ளன.
டிரைலர் வெளியான 10 நிமிடங்களிலேயே 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் பெற்று வலைதளங்களில் டிரெண்ட் ஆகின. ரஜினியின் முந்தைய படங்களின் டிரைலர் சாதனையை மற்றும் தமிழ் படங்களின் டிரைலரில் புதிய சாதனையை கூலி பட டிரைலர் படைக்கும் என எதிர்பார்க்கலாம்.