மேலும் செய்திகள்
சிம்பு மீது அதிருப்தியில் தமன்?
59 days ago
மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி
59 days ago
பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் வெளியான படம் ‛சிதாரே ஜமீன் பர்'. ஆர்.எஸ் பிரசன்னா என்பவர் இயக்கிய இந்த படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றதுடன் வியாபார ரீதியாகவும் ஓரளவு வரவேற்பு பெற்றது. அது மட்டுமல்ல, முதல் முறையாக இந்த படம் மூலம் அமீர்கான் தனது படத்தை ஓடிடிக்கு கொடுக்காமல் நேரடியாக யு டியூப்பிலேயே பார்க்கும் விதமாக பதிவேற்றியுள்ளார். நூறு ரூபாய் கட்டணம் செலுத்தி இதை ரசிகர்கள் பார்த்துக் கொள்ளலாம்.
அதேபோல கிராமங்கள் பக்கம் கூட திரையரங்குகள் அதிகம் இல்லை என்பதும், இது போன்ற படங்கள் அங்குள்ள மக்களை சென்றடைவதில்லை என்பதும் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக குஜராத்தில் உள்ள கொட்டாய் என்கிற கிராமத்திற்கு சென்று அங்குள்ள கிராமத்து மக்களுக்கு தற்காலிக திரை கட்டி இந்த படத்தை திரையிட்டு காட்டியுள்ளார் அமீர்கான்.
அந்த மக்களுடன் அமீர்கானும் சேர்ந்து படம் பார்த்துள்ளார். இது கடந்த 25 வருடங்களுக்கு முன்பு அமீர்கான் நடிப்பில் உருவான ‛லகான்' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற கிராமமாகும். அந்த ஞாபகார்த்தம் காரணமாக இந்த கிராமத்து மக்களுக்கு தனது படத்தை இப்படி திரையிட்டுள்ளார் அமீர்கான். இதற்கு பார்வையாளர்களிடம் 100 ரூபாய் என்கிற குறைந்த கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமீர்கான் கூறும்போது, “லகான் படம், அந்த படப்பிடிப்பு நடைபெற்ற கிராமம் என் நினைவில் எப்போதுமே பசுமையாக இருக்கும். அந்த மக்களுக்கு இந்த படம் சென்று சேர வேண்டும். கிராமத்து பகுதிகளில் மக்கள் படம் பார்க்கும் வகையில் திரையரங்குகள் உருவாக வேண்டும் என்று தான் இந்த படத்தை திரையிட்டு காட்டினேன். அரசு செயல்படுத்தியுள்ள யுபிஐ (ஜி பே) திட்டம் வெற்றிகரமாகவே செயல்பட்டு வருவதை பார்க்க முடிகிறது” என்று கூறியுள்ளார்.
59 days ago
59 days ago