உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம்

திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம்

மலையாள நடிகையான மாளவிகா மோகனன் தென்னிந்திய படங்கள் மட்டுமின்றி பாலிவுட்டிலும் அவ்வப்போது நடிக்கிறார். தற்போது இவர் கைவசம் மலையாளத்தில் மோகன்லால் உடன் ‛ஹிருதயபூர்வம்', தமிழில் கார்த்தி உடன் ‛சர்தார் 2', தெலுங்கில் பிரபாஸ் உடன் ‛தி ராஜா சாப்' ஆகிய படங்கள் உள்ளன. இவற்றில் ஹிருதயபூர்வம் படத்தில் மோகன்லால் ஜோடியாக நடித்துள்ளார். இருவரின் வயது வித்தியாசம் 33. இதை வைத்து சிலர் விமர்சிக்கின்றனர்.

இதற்கு மாளவிகா ‛‛முதலில் இப்படி பேசுவதை நிறுத்துங்கள். நடிகைகளிடம் வயது, வித்தியாசம் பற்றி பேசக்கூடாது. சினிமாவில் திறமையை மட்டும் பாருங்கள், அர்த்தமற்ற விஷயங்களை ஆராயாதீங்க'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !