விளம்பர வீடியோவில் உலக சாதனை படைத்த தீபிகா படுகோனே
பாலிவுட்டின் பிரபல நடிகை தீபிகா படுகோனே. அவர் இன்ஸ்டா சமூக வலைத்தளத்தில் 80 மில்லியன் பாலோயர்களை வைத்திருக்கிறார். பல சினிமா பிரபலங்கள் அவர்களது சமூக வலைத்தள கணக்குகளை வியாபார நோக்கத்திலும் பயன்படுத்தி வருகிறார்கள். லட்சங்கள், கோடிகள் என வாங்கி அவர்களது தளங்களில் விளம்பர வீடியோக்கள், வியாபார பதிவுகள் என பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
அப்படி ஒரு விளம்பர வீடியோவைப் பதிவிட்ட தீபிகா படுகோனே அதில் பார்வைகளில் உலக சாதனை ஒன்றைப் படைத்திருக்கிறார். அவர் நடித்த ஹோட்டல் விளம்பர வீடியோவை அவரது தளத்தில் பதிவிட்டிருந்தார். இரண்டு மாதங்களில் அந்த வீடியோ 1.9 பில்லியன், அதாவது 190 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது. உலக அளவில் வேறு எந்த பிரபலங்களும் இந்த அளவிற்கு பார்வைகளைப் பெற்றதில்லை. இதற்கு முன்பு கிரிக்கெட் வீரரான ஹர்திப் பாண்டியா பதிவிட்ட விளம்பர வீடியோ ஒன்று 1.6 பில்லியன் பார்வைகளைப் பெற்றிருந்தது. அந்த சாதனையைத் தற்போது தீபிகா முறியடித்துள்ளார்.
தீபிகா தற்போது அட்லி இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.