பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை
ADDED : 55 days ago
நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன், சமீபத்தில் ராஜ்யசபா எம்பி.,யாக பொறுப்பேற்றார். இந்நிலையில் எம்பி., ஆன பின்னர் முதன்முறையாக பிரதமர் மோடியை சந்தித்து அவர் பேசினார்.
இதுதொடர்பான போட்டோவை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள கமல், ‛‛இந்திய பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தேன். ஒரு கலைஞனாகவும் தமிழ்நாட்டின் பிரதிநிதியாகவும் அவரிடம் சில கோரிக்கைகளைத் தெரிவித்திருக்கிறேன். அவற்றுள் தலையாயது கீழடி. தமிழின் தொன்மையை, தமிழ் நாகரிகத்தின் பெருமையை உலகிற்கு உரக்கச் சொல்லும் தமிழர்களின் முன்னெடுப்புகளுக்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்'' என குறிப்பிட்டுள்ளார்.