உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: சிவாஜி நடித்த கேரக்டரில் எம்ஜிஆர்

பிளாஷ்பேக்: சிவாஜி நடித்த கேரக்டரில் எம்ஜிஆர்

1950களில் புகழ்பெற்ற நாடகங்கள் திரைப்படமாவது ஒரு டிரண்டாக இருந்தது. அப்படி திரைப்படமாக உருவான ஒரு நாடகம் 'என் தங்கை'. டி.எஸ்.நடராஜன் என்பவர் எழுதிய இந்த நாடகம் அண்ணன், தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்டது. கண்பார்வை இல்லாத தன் தங்கைக்காக அண்ணன் செய்யும் தியாகங்கள்தான் கதை. இந்த நாடகத்தில் அண்ணன் கேரக்டரில் சிவாஜி நடித்தார்.

இந்த நாடகம் 1952ம் ஆண்டு திரைப்படமாக தயாரானபோது அதே அண்ணன் கேரக்டரில் நடித்தது எம்ஜிஆர். அவருடன் பி.வி.நரசிம்ம பாரதி, மாதுரிதேவி, பி.எஸ்.கோவிந்தன், எம்.ஜி.சக்ரபாணி, ஈ.வி.சரோஜா மற்றும் எம்.என்.ராஜம் ஆகியோரும் நடித்தார்கள்.

நாராயணமூர்த்தி இயக்கிய இந்த படத்திற்கு சி.என்.பாண்டுரங்கன் இசை அமைத்தார். பெரிய வெற்றி பெற்றது. அதன்பிறகு 'சோட்டி பெஹன்' என்ற பெயரில் ஹிந்தியிலும், 'ஆட பாடுச்சு' என்ற பெயரில் தெலுங்கிலும், 'ஒன்டே பால்யா ஹோகலு' என்ற பெயரில் கன்னடத்திலும், 'புனீர் மிலனா' என்ற பெயரிலும் ஒடிசாவில் ரீமேக் ஆனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !