உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காந்தாரா 2வில் ‛கனகாவதி' ஆக ருக்மணி வசந்த்

காந்தாரா 2வில் ‛கனகாவதி' ஆக ருக்மணி வசந்த்

கன்னடத்தில் உருவாகி பான் இந்தியா அளவில் வரவேற்பை பெற்ற படம் ‛காந்தாரா'. ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்தார். தற்போது இதன் இரண்டாம் பாகம் காந்தாரா சாப்டர்-1 என்ற பெயரில் உருவாகிறது. ரிஷப்பே இயக்கி, நடிக்கிறார். இந்த படத்தில் அவருடன் ஜெயராம், முகேஷ் பூஜாரி, ருக்குமணி வசந்த் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். வருகிற அக்டோபர் இரண்டாம் தேதி இந்த படம் திரைக்கு வருகிறது.

இந்நிலையில் இன்று இந்த படத்தில் ருக்மணி வசந்த் நடித்துள்ள கேரக்டரின் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். அதில் அவர் கனகாவதி என்ற வேடத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த போஸ்டரை நடிகை ருக்மணி வசந்தும் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். 125 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அஜனீஸ் லோகேஷ் இசையமைக்கிறார்.

வரமஹாலக்ஷ்மி திருவிழாவின் இந்த புண்ணிய நாளில் ருக்மணி வசந்தை 'கனகவதி' (Kanakavathi) எனும் கதாபாத்திரமாக காந்தாரா அத்தியாயம் 1 படத்திலிருந்து அறிமுகப்படுத்தியுள்ளது தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !