37 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாகும் மாலாஸ்ரீ மகள்
ADDED : 146 days ago
கன்னட சினிமாவின் முக்கியமான நடிகை மாலாஸ்ரீ. இவரது மகள் ஆராதனா கடந்த ஆண்டு தர்ஷன் ஜோடியாக 'கடேரா' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தற்போது தன்னை விட 35 வயது மூத்த நடிகர் உபேந்திரா ஜோடியாக நடிக்கிறார்.
உபேந்திரா நடிப்பில் 'நெக்ஸ்ட் லெவல்' என்ற பெயரில் இது பான் இந்தியா படமாக தயாராகிறது. தருண் ஸ்டூடியோ சார்பில் தருண் சிவப்பா தயாரிக்கிறார். அரவிந்த் கவுசிக் இயக்குகிறார். படத்தின் பணிகள் ஐதராபாத்தில் பூஜையுடன் தொடங்கி உள்ளது.