உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'சன்னிதானம்(P.O)' : சேரன், மஞ்சுவாரியர் வெளியிட்ட யோகிபாபு பட போஸ்டர்

'சன்னிதானம்(P.O)' : சேரன், மஞ்சுவாரியர் வெளியிட்ட யோகிபாபு பட போஸ்டர்

யோகி பாபு நடிக்கும் 'சன்னிதானம்(P.O)' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் சேரன் மற்றும் நடிகை மஞ்சு வாரியர் இணைந்து வெளியிட்டுள்ளனர். படத்தின் தலைப்புக்கு ஏற்ப கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில், பம்பை மற்றும் எருமேலி போன்ற புகழ்பெற்ற இடங்களிலும், தமிழ்நாட்டில் சென்னை மற்றும் பொள்ளாச்சியிலும் இந்த பட படப்பிடிப்பு நடந்துள்ளது.

வலுவான மனித உணர்வுகளை அடிப்படையாக கொண்டு, சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் எதிர்கொள்ளும் எதிர்பாராத சம்பவம் மற்றும் அதை தொடர்ந்து அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை இந்த படத்தின் கதை பேசுகிறது. படத்தின் கதை மற்றும் திரைக்கதையை அஜினு அய்யப்பன் எழுதியுள்ளார். அருண் ராஜ் இசையமைக்க, அமுதசாரதி இயக்கியுள்ளார்.

தமிழ், கன்னடம், துளு, தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பான்-இந்திய திரைப்படமாக 'சன்னிதானம்(P.O)' வெளியாக உள்ளது. யோகிபாபுடன் ரூபேஷ் ஷெட்டி, சித்தாரா, பிரமோத் ஷெட்டி, வர்ஷா விஸ்வநாத் உள்ளிட்ட பலர் இணைந்து நடிக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !