உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அவுட்டோர்களுக்கும் தலையணையுடன் பயணிக்கும் ஜான்வி கபூர்

அவுட்டோர்களுக்கும் தலையணையுடன் பயணிக்கும் ஜான்வி கபூர்

தெலுங்கில் தேவரா படத்தை அடுத்து ராம் சரணுடன் பெத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார் ஜான்வி கபூர். ஹிந்தியில் அவர் நடித்துள்ள பரம் சுந்தரி என்ற படம் ஆகஸ்ட் 29ல் திரைக்கு வருவதால் அப்படத்தின் பிரமோசன் நிகழ்ச்சிகளிலும் தற்போது பங்கேற்று வருகிறார். மேலும், அவர் தான் மும்பையில் இருந்து எந்த அவுட்டோர்களுக்கு சென்றாலும் ஒரு தலையணையையும் கூடவே எடுத்துச் செல்கிறார். இப்படி தொடர்ந்து தலையணையுடன் ஜான்வி கபூர் செல்வது குறித்து அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, இது எனக்கு பிடித்தமான தலையணை என்பதோடு, இதில் படுத்தால் நிம்மதியாக தூக்கம் வரும். அதனால் தான் எங்கு சென்றாலும் இந்த தலையணை இல்லாமல் நான் பயணம் செய்வதே இல்லை என்று கூறியிருக்கிறார் ஜான்வி கபூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !