உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல்

‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல்


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடித்துள்ள 'கூலி' படம் இன்று (ஆக.,14) அதிகாலையில் இந்தியாவில் வெளியானது. அமெரிக்காவில் இந்திய நேரப்படி இன்று அதிகாலையில் அங்கு பிரிமியர் காட்சிகள் நடைபெற்றது. அதற்கு முன்பாக 2.9 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலை அப்படம் குவித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்கள். வசூல் முடிவில் அது 3 மில்லியனைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்ப் படம் ஒன்று பிரிமியர் காட்சியில் இவ்வளவு வசூலைக் குவித்து சாதனை படைத்துள்ளது. வார இறுதி வசூலில் இன்னும் அதிகமான வசூலைக் குவிக்கும் எனத் தெரிகிறது. உலக அளவில் இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் 150 கோடியை நிச்சயம் கடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !