உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜெயிலர் 2வில் வசந்த் இருக்கிறாரா?

ஜெயிலர் 2வில் வசந்த் இருக்கிறாரா?

ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கும் ஜெயிலர் 2 படப்பிடிப்பு நடந்து வருகிறது. பார்ட் 2 என்பதால் முந்தைய பாகத்தில் நடித்தவர்கள் இதில் இருக்க வாய்ப்பு. ஆனால், முதல் பாகத்தில் ரஜினி மகனாக நடித்த வசந்த் ரவி இறந்துவிடுவதால் அவர் ஜெயிலர் 2 வில் இருக்கிறாரா? பிளாஷ்பேக் காட்சிகளில் வருகிறாரா என்பதில் சஸ்பென்ஸ் நீடிக்கிறது.

இது குறித்து அவரிடம் கேட்டால் ''ஜெயிலர் 2 உருவாகி வருவது மகிழ்ச்சி. என் சினிமா வாழ்க்கையில் ஜெயிலரில் அதுவும் ரஜினி சார் மகனாக நடித்தது பெரும் மகிழ்ச்சி. ஜெயிலர் 2வில் நான் இருக்கிறேனா? இல்லையா என்பது குறித்து தெரியாது. அது குறித்து படக்குழுதான் முடிவெடுக்க வேண்டும். நான் எதுவும் சொல்ல முடியாது. இப்போது இந்திரா என்ற படத்தில் கண் பார்வையற்ற போலீஸ் அதிகாரியாக வருகிறேன். ஆகஸ்ட் 22ல் படம் ரிலீஸ். ஜெயிலர் படத்தில் காமெடியனாக நடித்த சுனில் இதில் வில்லனாக வருகிறார். '' என்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !