உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார்

நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார்

மலையாள திரையுலகில் நடிகர் சங்கத்திற்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. எர்ணாகுளத்தில் நடக்கும் இந்த தேர்தலில் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் நடிகர்கள் கூட ஆர்வமாக கலந்து கொண்டு ஓட்டளித்தனர். பிரபல நகைச்சுவை நடிகரான பிஜூ குட்டன் என்பவர் ஓட்டளிக்க பாலக்காட்டில் இருந்து கிளம்பி வந்த போது அவர் பயணித்த கார் ஒரு லாரியில் பின்பக்கத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காயமடைந்த பிஜூ குட்டன் மற்றும் ஓட்டுனர் இருவரும் உடனடியாக பாலக்காடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் பிஜூ குட்டனுக்கு ஒரு கையில் மட்டும் காயம் ஏற்பட்டுள்ளது. காரின் ஓட்டுனர் பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சையில் இருக்கிறார். இதனை தொடர்ந்து அடிபட்ட கைக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு உடனடியாக நடிகர் சங்க தேர்தலில் ஓட்டளிப்பதற்காக மாற்று வாகனத்தில் எர்ணாகுளம் வந்து தனது ஓட்டை பதிவு செலுத்தியுள்ளார் பிஜூ குட்டன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !