மேலும் செய்திகள்
மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா
48 days ago
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
48 days ago
மலையாள நடிகர் சங்கத்திற்கான புதிய தேர்தல் இன்று (ஆகஸ்ட் 15) நடைபெற்றது. கடந்த வருடம் நடிகர் சங்க தலைவராக இருந்த மோகன்லால் ராஜினாமா செய்த நிலையில் மீண்டும் போட்டியிட விரும்பவில்லை என கூறி விட்டார். இதனை தொடர்ந்து பலரும் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்டனர்.
அந்த வகையில் நடிகை ஸ்வேதா மேனனும் நடிகர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாட்ஷா பட வில்லன் நடிகர் தேவன், ஸ்வேதா மேனனின் புகழை குறைக்கும் விதமாக இவர் ஆபாச படத்தில் நடித்ததாக கூறி இவர் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும், அவர் எப்போதோ ஒரு பேட்டி ஒன்றில் கூறிய சர்ச்சையான கருத்தை முன்வைத்து அவர் மீது காவல்துறையில் வழக்கு தொடர்ந்தார். ஸ்வேதா மேனன் மீது எப்ஐஆரும் பதிவு செய்யப்பட்டது. ஆனால் நீதிமன்றம் அந்த வழக்கை நிறுத்தி வைத்து விட்டது.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற மலையாள நடிகர் சங்க தேர்தலில் ஸ்வேதா மேனன் வெற்றிப்பெற்று தலைவராக தேர்வாகியுள்ளார். லையாள நடிகர் சங்கமான 'அம்மா' (AMMA)வின் தலைவராக ஒரு பெண் தேர்வாகியுள்ளது, வரலாற்றில் இதுவே முதன்முறை. பல்வேறு சர்ச்சைகளையும், கடுமையான எதிர்ப்புகளையும் தாண்டி அவர் இந்த பதவியைப் பெற்றுள்ளார்.
48 days ago
48 days ago