மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
47 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
47 days ago
'ஆத்தா உன் கோவிலிலே' என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை கஸ்தூரி. பல்வேறு நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடித்துள்ளார். 51 வயதான நடிகை கஸ்தூரி, சமூக பிரச்னைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர்.
எந்த அரசியல் கட்சிகளையும் சாராமல், சமூக வலைதளங்களின் மூலம் மக்களை பாதிக்கும் பிரச்னைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். இந்த நிலையில், சென்னை பாஜ தலைமை அலுவலகமான கமலாலயத்தில், அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில், நடிகை கஸ்தூரி இன்று பா.ஜ.,வில் இணைந்தார்.
பா.ஜ.,வில் இணைந்தது தொடர்பாக அவரிடம் தொடர்புகொண்டபோது, ‛‛திமுக.,வினர் என்னை ‛சங்கி.. சங்கி..' என நான்கு வருடமாக சொல்லி சொல்லி ஏற்கனவே என்னை பா.ஜ.,வில் சேர்த்துவிட்டனர். திமுக.,வினர் என்னை இழிவுப்படுத்த வேண்டும் என நினைத்து அப்படி சொன்னார்கள். ஆனால், சமீபத்தில் நடந்த பல சமூக விஷயங்களில் திமுக அரசின் பாராமுகத்தை பார்த்து கட்சி அரசியலுக்கு வந்துவிட்டேன். நான் பா.ஜ.,வில் சேர்ந்ததற்கான முழு ‛கிரெடிட்'ம் திமுக.,வுக்கு தான் கொடுக்க வேண்டும். நான் ஏற்கனவே மக்கள் பணிகளை செய்து வருகிறேன். அதனை தொடர்ந்து செய்ய எனக்கு வாய்ப்பளித்துள்ளனர். வேறு எந்த பணம், பதவியையும் எதிர்பார்த்து நான் கட்சியில் சேரவில்லை'' எனக் கூறியுள்ளார் நடிகை கஸ்தூரி.
47 days ago
47 days ago