58 வயதிலும் தீவிர ஒர்க்அவுட்டில் ஈடுபடும் நதியா!
ADDED : 47 days ago
மலையாள படங்களில் நடித்து வந்த நதியா, 1985ல் ‛பூவே பூச்சூடவா' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அதன் பிறகு ‛பூமழை பொழியுது, சின்னத்தம்பி பெரியதம்பி, ராஜாதி ராஜா, ராஜகுமாரன்' என பல படங்களில் நடித்தவர், 1988ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு 2004ம் ஆண்டு ‛எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி' படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தவர், ‛தாமிரபரணி, சண்ட, பட்டாளம்' என பல படங்களில் நடித்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது நதியாவிற்கு 58 வயதாகிறது. என்றாலும் தனது உடல்கட்டை பிட்டாக வைத்திருக்கிறார். அந்த அளவுக்கு டயட்ஸ், உடற்பயிற்சி என்று தீவிரமாக கடைபிடித்து வருகிறார். தற்போது தான் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் ஒரு வீடியோவையும் இணையப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் நதியா.