உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தனுஷின் ‛இட்லி கடை'யில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள ஷாலினி பாண்டே!

தனுஷின் ‛இட்லி கடை'யில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள ஷாலினி பாண்டே!


‛நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தை அடுத்து தனுஷ் இயக்கி ஹீரோவாக நடித்துள்ள படம் ‛இட்லி கடை'. இந்த படத்தில் அவருடன் அருண் விஜய், நித்யா மேனன், சத்யராஜ், பார்த்திபன், ராஜ்கிரண், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படம் வருகிற அக்டோபர் ஒன்றாம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் ‛அர்ஜுன் ரெட்டி' படத்தில் அறிமுகமான ஷாலினி பாண்டேயும் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழில் ‛100% காதல், கொரில்லா' போன்ற படங்களில் ஏற்கனவே நடித்துள்ள ஷாலினி பாண்டே, இந்த இட்லி கடை படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !