ரஜினியின் ‛கூலி' படத்தின் மூன்றாவது நாள் வசூல் எவ்வளவு?
ADDED : 48 days ago
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வந்த படம் ‛கூலி'. லோகேஷ் கனகராஜ் இயக்கி இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்று வந்த நிலையில், திரைக்கு வந்த பிறகு கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த கூலி படம் திரைக்கு வந்து மூன்றாவது நாள் முடிவில் 300 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் தெரிவிக்கிறது.
அதோடு 300 கோடி வசூல் என்ற இலக்கை மிக விரைவாக எட்டிப்பிடித்த தமிழ் படம் என்ற சாதனையையும் கூலி படம் பெற்றுள்ளது. அது மட்டுமின்றி, தெலுங்கில் முதல் இரண்டு நாட்கள் ‛வார்-2' படத்தின் வசூல் அதிகமாக இருந்த நிலையில் மூன்றாவது நாள் அந்த படத்தின் வசூலை ரஜினியின் கூலி படம் முறியடித்திருப்பதாக டோலிவுட்டில் தகவல்கள் வெளியாகி உள்ளன.