ஆணவ கொலை பின்னணியில் உருவாகும் 'நெல்லை பாய்ஸ்'
'அருவா சண்ட' படத்தை தயாரித்த வி.ராஜா, தற்போது தயாரிக்கும் படம் 'நெல்லை பாய்ஸ்'. கதையின் நாயகனாக அறிவழகனும், நாயகியாக ஹேமா ராஜ்குமாரும், வில்லனாக வேலராம மூர்த்தியும் நடிக்கிறார்கள். ரஷாந்த் அர்வின் இசை அமைக்கிறார், ரவீந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். கமல்ஜி இயக்குகிறார்.
படம் பற்றி இயக்குனர் கூறும்போது இன்றைய நவீன நாகரீக உலகத்தில் மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் ஜாதி மறுப்பு திருமணங்களை அங்கீகரிக்காத ஆணவ கொலை சமூகத்தில் இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. அதுவும் ஆணவ படுகொலை என்றால் தென் தமிழகம் அதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவற்றை தோலுரித்துக் காட்டும் விதமாகவும், ஈவு இரக்கமற்ற கல் நெஞ்சங்களையும் கலங்க வைக்கும் விதமாக சொல்வதோடு, நட்புக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவது இந்த நெல்லை சீமை என்பதையும் காட்டும் வகையில் இந்த படம் உருவாகி வருகிறது. அக்டோபர் மாதம் படம் வெளியாகிறது என்றார்.