உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 25 நாட்களைக் கடந்த 'தலைவன் தலைவி'

25 நாட்களைக் கடந்த 'தலைவன் தலைவி'

ஒரு படம் வெளியாகி ஒரு வாரம் ஓடுவதே பெரிய சிரமமாக இருக்கும் இந்தக் காலத்தில் ஒரு சில படங்கள் மட்டும்தான் நான்கு வாரங்கள் தாக்குப் பிடித்து ஓடுகின்றன. கடந்த மாதம் 25ம் தேதி வெளியான 'தலைவன் தலைவி' படம் அப்படி ஓடி 25வது நாளைத் தொட்டுள்ளது.

பாண்டிராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், விஜய் சேதுபதி, நித்யா மேனன் மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம். 80 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றி பெற்றது. இப்படத்தின் வெற்றி விழாவையும் படக்குழுவினர் அவர்களுக்குள்ளாகவே கொண்டாடிக் கொண்டார்கள்.

இந்த வருடத்தில் வெளிவந்த படங்களில் குடும்பப் பாங்கான படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அது இந்தப் படத்திற்கும் கிடைத்தது. “மத கஜ ராஜா, குடும்பஸ்தன், டூரிஸ்ட் பேமிலி, மாமன்' ஆகிய குடும்பப் படங்களுக்குக் கிடைத்த வரவேற்பு 'தலைவன் தலைவி'யிலும் தொடர்ந்தது.

இந்த வாரம் இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !